மருத்துவத்துறையின் அடுத்த மைல்கல்.. எலான் மாஸ்க் நிறுவனம் செஞ்ச தரமான சம்பவம்.. இனி இப்படி ஒரு குறைபாடே இருக்காது…

Published:

மருத்துவத்துறையின் அசுர வளர்ச்சியால் இன்று இறப்பு விகிதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய காயம் முதல் பெரிய பெரிய அறுவை சிகிச்சைகள் வரை இன்று ரோபோட்டிக் முறையில் மருத்துவம் வளர்ந்து விட்டது. பல ஆயிரம் மைல்கள் கடந்து நோயாளி இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்தே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவத்துறையின் அடுத்த மைல் கல்லாக பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இனி உலகை காணும் அற்புத கண்டுபிடிப்பினை அமெரிக்காவைச் சேர்ந்த உலக தொழிலதிபர் எலான் மாஸ்க்-ன் நிறுவனமான நியூராலிங்க் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவனம் தயாரித்துள்ள Blind Sight என்ற பிரத்யேக லென்ஸ் போன்ற கருவி மூலமாக இரு கண்களிலும் பார்வை இழந்தவர்களுக்கும், ஆப்டிக் நரம்பு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இக்கருவியின் மூலம் மீண்டும் பார்வையைக் கொண்டு வரலாம். மேலும் சாதாரண மனித கண்களைக் காட்டிலும் இதன் பார்வை திறன் அதிக துல்லியம் மற்றும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.

டேப்லெட் வாங்கப்போறீங்களா…? ரூ. 25000 த்திற்கும் கீழ் இருக்கும் சிறந்த டேப்லெட்களின் பட்டியல் இதோ…

இதன்மூலம் இனி உலகில் பார்வை மாற்று திறனாளிகளே இருக்க முடியாது என்னும் அளவிற்கு இந்த Blind Sight கருவியின் செயல்பாடு இருக்கும். தற்போது சோதனை அடிப்படையில் உள்ள இந்தக் கருவி விரைவில் முறையான அனுமதியைப் பெற்று மருத்துவத்துறைக்குள் அடியெடுத்து வைக்கும் எனக் கூறப்படுகிறது. இக்கருவியின் விலை, புக்கிங் போன்ற விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் இந்தக் கருவியால் கண் மருத்துவத் துறை இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறது.

சமீபத்தில் எலான் மாஸ்க்-ன் நியூரா லிங்க் நிறுவனம் பக்கவாதத்தால் கை, கால்கள் செயலிழந்தவர்களுக்கு மீண்டும் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு வரும் வகையில் மூளையில் பொருத்தக் கூடிய சிப் ஒன்றைக் கண்டுபிடித்து அதன் மூலம் நரம்பு மண்டல செயல்பாடுகளை மீண்டும் தூண்டி விடக் கூடிய கருவியை கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விண்வெளித்துறைக்கு மனிதர்கள் சுற்றுலா செல்லக் கூடிய வகையில் எலான் மாஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் முதன்முறையாக மனிதர்களை பூமிக்கு வெளியில் இறக்கி சாதனை படைத்தது.

மேலும் உங்களுக்காக...