வாழைப்பூவை வாரம் இரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
அம்மான் பச்சரியை சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் வயிற்றுப்புண் ஆறும்.
தினமும் பச்சை வாழைப்பழம் 1 அல்லது 2 சாப்பிட்டால் வயிற்று புண் குறையும்.
அகத்திக்கீரையை காய்ச்சி குடிக்க வயிற்றுப்புண் ஆறும்.
பொடுதலை இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அரைத்து தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குறையும்.
விளக்கெண்ணெய் கொதிக்கும் நிலையில் குப்பைமேனி இலைகளை போட்டு சடசடப்பு அடங்குவதற்கு முன் பச்சை இலையாக இறக்கி ஆற வைத்து இலையை தனியாக எடுத்து மை போல் அரைத்து எண்ணெயுடன் சேர்த்து இரவு படுக்கப் போகும் முன்பு 1/4 கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறையும்.
புளியம்பட்டை தூளை உப்பு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குறையும்.
பலா இலையை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட வயிற்றுப்புண் குறையும்.
தயிர்சாதத்தில், சுக்குப்பொடி போட்டு சாப்பிட வயிற்றுப்புண் குறையும்.
கற்பூரவல்லி வாழைக்காய் பொடியுடன், ஏலக்காய் பொடி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குறையும்.
காளானை முட்டைக்கோசு, பச்சைப் பட்டாணி சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட வயிற்றுப்புண் குறையும்.
மணத்தக்காளி கீரை , பருப்புக் கீரை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுபுண் குறையும்.
பக்கவிளைவில்லாத பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் தொடரும்…..