மார்பு வலி என்பது கரோனரி இதய நோயால் மார்பு பகுதிகளில் வலி அல்லது மிகுந்த அசௌகரியத்தை உணரும் நிலையாகும். இந்த பிரச்சனை இதய தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது உண்டாகும்.
பெரும்பாலும் இதயத்திற்கு செல்லும் தமனிகள் குறுகியோ அல்லது அடைப்பு ஏற்பட்டோ இருந்தாலும் ஏற்படும். இப்போது இதற்கான சில நாட்டு வைத்திய முறைகளைக் காண்போம்.
ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை மார்பு பகுதியில் காலையிலும், மாலையிலும் நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மார்பு வலியில் இருந்து விடுபடலாம்.
மற்றொரு அற்புதமான வழி, 1 1/2 கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 டீஸ்பூன் தேனை சேர்த்து கலந்து, தினமும் இரண்டு வேளை இந்த பானத்தைக் குடித்து வர வேண்டும்.