சினிமாவிலும், சீரியலிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தார் மட்டும் அதிகாலையில் சூரியனை வணங்குவதாய் காட்டுவாங்க. அந்தமாதிரி வணங்குவது அவங்களுக்கு மட்டுமே உரித்தானதுன்னு நினைச்சுப்போம். ஆனா, இந்த சூரிய நமஸ்காரம் எல்லாருமே செய்யலாம்.
“கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா?” என்ற பழமொழி நம்மூரில் உண்டு. சூரியநமஸ்காரத்திற்கும் கண்பார்வைத்திறனுக்குமுள்ள தொடர்பை இந்த பழமொழி விளக்குது. கண்ணொளி வழங்கும் சூரிய சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
அதிகாலை நேரத்தில் நம் உடலில் படும் சூரியஒளி தேக ஆரோக்கியத்திற்கு மேம்படுத்தும். காலைவெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலைவெயிலில் தணிந்துபோகும் என்பது சித்தர்களின் வாக்கு. சூரியஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும்கூட குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.
சூரியநமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்தநேரம் சூரிய உதயக்காலம். அதிகாலை நேரம் இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும். இரவில் தூக்கத்தால் உடலும், மனதும் ஓய்வு கிடைப்பதால் அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மந்திரங்களைச் சொல்லி சூரியநமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.
ஓம் மித்ராய நமஹ – சிறந்த நண்பன்.
ஓம் ரவயே நமஹ – போற்றுதலுக்குரியன.
ஓம் சூர்யாய நமஹ – ஊக்கம் அளிப்பவன்.
ஓம் பானவே நமஹ – அழகூட்டுபவன்.
ஓம் ககாய நமஹ – உணர்வுகளுக்கு வலிமை தருபவன்.
ஓம் பூஷ்ணே நமஹ – புத்துணர்ச்சி தருபவன்.
ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ – ஆற்றல் அளிப்பவன்.
ஓம் மரீசயே நமஹ – நோய்களை அழிப்பவன்.
ஓம் ஆதித்தாய நமஹ – கவர்ந்திழுப்பவன்.
ஓம் சவித்ரே நமஹ – சிருஷ்டிப்பவன்.
ஓம் அர்க்காய நமஹ – வணக்கத்திற்கு உரியவர்.
ஓம் பாஸ்கராய நமஹ – ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.
மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரியநமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஜானபூர்வமான உண்மையாகும்.
சூரியனைப் போற்றுவோம். உடல் ஆரோக்கியத்தையும், அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம்.