மாலை நேரத்துல மொறுமொறுவென எதாவது சாப்பிடனும்ன்னு தோணும். கடையில் வாங்கினால் ஆரோக்கிய குறைவுன்னு வீட்டிலேயே செய்யலாம் மொறுமொறு பசலைக்கீரை பக்கோடா.. பசலைக்கீரைன்னு சொன்னால் நம்மில் பலருக்கு தெரியாது. ஆனா, பாலக் கீரைன்னு சொன்னால் எல்லாருக்குமே தெரியும். பாலக், பசலை ரெண்டுமே ஒன்னுதான்
பசலைக்கீரை பக்கோடா
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 200 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2-4 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகலமான கிண்ணத்தில் பசலைக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டையாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பசலைக்கீரை பக்கோடா ரெடி. உருட்டி