இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் திடீர் திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் சரி இல்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள். அப்படி திடீரென்று உடம்பு சரியில்லாமல் போகும்போது நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் ஒரு சில மருத்துவ குணம் படைத்த பொருட்களை வைத்து வைத்தியம் செய்யலாம். நம் முன்னோர்கள் அப்படித்தான் செய்து வந்தார்கள் நலமுடன் வாழ்ந்தார்கள். அதைப்பற்றி இனி காண்போம்.
வயிறு உப்பசமாக இருக்கிறது என்றால் சிறிது காயப்பொடியை எடுத்து தண்ணீரில் அல்லது மோரில் கலந்து பருகும் போது உடனே சரியாகும். நெஞ்சு எரிச்சலாக இருந்தால் இஞ்சி இடித்து சாறு எடுத்து பருக வேண்டும்.
உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் சுக்கு கொத்தமல்லி விதை போன்றவற்றை காய்ச்சி குடித்தால் உடனே பித்தம் இறங்கி விடும். உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் மிகப்பெரிய அருமருந்து.
சளி இருமலுக்கு சின்ன வெங்காயம், மிளகு இரண்டையும் தட்டி சாறு எடுத்து குடித்தால் உடனே நெஞ்சு சளி இறங்கும். இது போன்ற நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே நம் உடலில் ஏற்படும் சிறு உபாதைகளை சரி படுத்த முடியும்.