கற்றாழையை எப்படி, எந்த நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடையோடு சேர்த்து தொப்பையையும் விரைவாக குறைக்கலாம் என பார்க்கலாம்…
உடல் எடையைக் குறைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் நம் வீட்டை சுற்றி வளரக்கூடிய மூலிகைகள் சில மிகவும் எளிமையான வழியில் நமது உடல் எடையை குறைக்க உதவுகின்றன. அதில் கற்றாழை மிக முக்கியமான பங்குவகிப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது எப்படி எடுத்துக்கொண்டால் கற்றாழை தொப்பையைக் என்பது பற்றி அறிந்து கொள்வோம்..
கற்றாழை நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நம் உடலில் உள்ள கலோரிகள் விரைவாக கரையும். நாள் முழுவதும் அதிக கலோரிகளை உட்கொள்வதால் அவதிப்படுபவர்கள் கற்றாழையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனைகள்:
கற்றாழை மலமிளக்கி குணம் கொண்டது. இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகரிக்க செரிமான பிரச்சனை மிக முக்கியமான காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க முதலில் ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு கற்றாழை நல்ல மருந்து.
வைட்டமின் பி:
கற்றாழையில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இது கொழுப்பை ஆற்றலாகவும் மாற்றுகிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்பு சத்து குறைந்து எடை குறையும்.
கற்றாழையை எப்படி எடுத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும் என பார்க்கலாம்…
டிடாக்ஸ்:
கற்றாழையில் உள்ள பண்புகள் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. இதனால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு, உடலில் கொலஸ்ட்ரால் குறைவாக சேமிக்கப்படும். மேலும் எடையும் விரைவாக குறையும்.
எப்படி எடுப்பது:
கற்றாழையை ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்வது சிறந்த வழியாகும். காலையில் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றை எடுத்துக் கொண்டால், அது நல்ல பலனைத் தரும். இதனை டிடாக்ஸ் பானமாக மட்டுமின்றி ஜூஸ், ஸ்மூத்திகளிலும் கலந்து குடிக்கலாம்.
அலோவேரா ஜெல் (Aloe vera Gel):
கற்றாழை தண்டினுள் இருக்கும் ஜெல்லை சாப்பிடுவதும் உடல் எடையைக் குறைக்க உதவும். சாப்பிடுவதற்கு முன் ஜெல்லை நன்கு கழுவ வேண்டும். அதேபோல், நிபுணர்களின் ஆலோசனையின் படி உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.
தேன்:
கற்றாழை ஜூஸில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இது நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
சாலடுகள்:
கற்றாழை ஜெல்லை சில ஸ்மூத்திகள் மற்றும் சாலட்களில் சேர்த்து பயன்படுத்தலாம். இதன் காரணமாக, நாம் அறியாமலேயே அதன் கசப்பு சுவையை மறந்து சாப்பிடலாம்.