மஞ்சள் தூளின் மகிமைகள் தெரிஞ்சால் அசந்துடுவீங்க!

By Staff

Published:

c22d7a55a29e8c7eda0ab6ccd845ba5b

மஞ்சளை உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளை அழிப்பதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தச் செய்கின்றது.

மேலும் மஞ்சள் இரத்தத்தினை சுத்திகரிக்கச் செய்கின்றது. மேலும் மார்புச் சளி, நீண்டகால சளித் தொல்லை, இருமல் தொல்லை இருப்பவர்கள் மஞ்சள் தூளினை பாலில் போட்டுக் கலந்து குடித்துவரவும்.

மேலும் மஞ்சள் தூள் செரிமான சக்தியினை அதிகரித்து, நமது செரிமான மண்டலத்தைத் திறம்பட செயல்பட வைக்கின்றது.

மேலும் 40 வயதினைத் தாண்டியவர்கள் மஞ்சளைத் தவறாமல் உணவில் சேர்த்துவந்தால் இதய நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

மேலும் முக அழகினை மெருகூட்டவும், முகப் பருக்கள், காயத் தழும்புகள், அம்மைத் தழும்புகள் போன்றவற்றிற்கு மஞ்சள் தூளினை பாலுடன் சேர்த்துத் தடவி வந்தால் மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும்.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க விரும்புவோருக்கு மஞ்சளைவிட மிகச் சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்கப் போவதில்லை.

Leave a Comment