மாங்காய் கோடை காலங்களில் மிகவும் மலிவான விலைக்குக் கிடைக்கும் ஒரு உணவு வகையாகும். மாங்காயின் நன்மைகள் குறித்துதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
டயட் இருப்பவர்கள் தங்களுடைய சாலட் வகைகளில் மாங்காயை சேர்த்துக் கொள்ளலாம். புளிப்பு சுவையாக இருப்பதால் சாலட்டின் சுவையினைக் கூட்டுவதோடு கலோரி குறைந்த உணவாகவும் இருக்கும்.
மேலும் மாங்காய் செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது, மாங்காயினை அப்படியே சாப்பிடுவதைவிட வெட்டி தாளித்து சாப்பிடலாம்.
இல்லையேல் குழம்பாக வைத்து சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத் தன்மை அதிகமாக இருந்தால் மாங்காயை எடுத்துக் கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியினை சரிசெய்யவும், சோர்வினைப் போக்கி தெம்பூட்டவும் மாங்காய் செய்கின்றது. மேலும் பித்தப் பையின் இயக்கத்தினை சீர்படுத்துவதோடு, பித்தநீர் சுரப்பின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மாங்காய் கீற்றுகளை சாப்பிட்டு வந்தால் சிறந்த தீர்வினைப் பெறுவீர்கள். மாங்காயினை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் ஈறுகள் வலுப்படும். பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான ஈறுகளில் ரத்தம் கசிதல், சொத்தைப் பல், பலமிழந்த பற்கள் போன்ற பிரச்சினைகளுக்கும் மாங்காய் சிறந்த தீர்வாக இருக்கின்றது.
கைகால் நடுக்கம் போன்ற நரம்புத் தளர்ச்சி பிரச்சினை உள்ளவர்கள் மாங்காயினை எடுத்துக் கொள்வது நல்லது.