கருப்பு உலர் திராட்சை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!

By Staff

Published:

c534177e8de7c2be54806f857df29dbb-1-2

உலர் திராட்சையில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலங்களில் இரத்தத்தில் உள்ள PH மதிப்பினை அதிகரிக்க உலர் திராட்சையினை நீரில் போட்டு ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறந்த மாற்றத்தைப் பெறுவீர்கள்.

மேலும் பிரசவத்தின்போது ஏற்படும் இரத்தப் போக்கினை ஈடுகட்டச் செய்வதிலும் உலர் திராட்சை முக்கிய பங்காற்றுகின்றது.

மேலும் தலை முடி கொட்டுதல் பிரச்சினை இருப்பவர்கள் உலர் திராட்சையினை காலை மாலை என இருவேளை 10 என்ற அளவில் சாப்பிட்டு வந்தால் தலையின் ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி கொட்டுவது சரியாவதோடு, புதிதாக முடி வளரவும் செய்யும்.

மேலும் குழந்தைகளுக்கு என்று கொண்டால் 2 வயதில் இருந்து கொடுக்கத் துவக்கலாம். உலர் திராட்சையினை அப்படியே சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பாலில் ஊறவைத்து அரைத்துக் கொடுக்கலாம். 

அதேபோல் முதியவர்கள் கருப்பு உலர் திராட்சையினை ஜூஸாக எடுத்துக் கொண்டால்  உடல்நலம் பெறுவார்கள்.
 

Leave a Comment