மீனில் அதிக புரதச் சத்துகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும், மீனை நாம் எடுத்துக் கொள்ளும் அளவு கருவாடை எடுத்துக் கொள்வதில்லை. கருவாட்டின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
கருவாடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக உள்ளது, மேலும் எலும்பு மற்றும் பற்களினை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
மேலும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சினைகளான நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சினைகளைச் சரி செய்வதாய் உள்ளது.
மேலும் இது வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் போன்றவற்றினைச் சரிசெய்வதாக உள்ளது, மேலும் சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் பிரசவித்த தாய்மார்கள் பால் சுரக்க பூண்டு, லேகியம் எனப் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிட்டு பால் உற்பத்தியினை அதிகரிப்பர். அவர்கள் நிச்சயம் பால் சுறா கருவாட்டினை எடுத்துக் கொண்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும், கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். மேலும் உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள்.
கருவாட்டினை ப்ரை, தொக்கு, வறுவல், குழம்பு என பல வகையான ரெசிப்பிகளாக செய்து சாப்பிட்டாலும் கருவாட்டில் இரசம் வைத்து சாப்பிட்டால்தான் முழு சத்தும் கிடைக்கப் பெறும்.