மருத்துவர்கள் பேரிச்சம் பழத்தை உடல்நிலை சரியில்லாதவர்களின் பட்டியலில் கட்டாயம் பரிந்துரைப்பார்கள் என்பதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அத்தகைய பேரிச்சம்பழத்தின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். பேரீச்சம் பழம் இரும்புச் சத்தினை அதிகரிப்பதாக உள்ளது, மேலும் உள்ள இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபிக்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதால் இரத்த சோகைப் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும்.
மேலும் பேரிச்சம்பழத்தினை தனியாக உண்பதைவிட, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரும்புச் சத்து விறுவிறுவென அதிகரிக்கச் செய்கின்றது.
மேலும் பேரிச்சம் பழமானது செரிமான மண்டலத்தினை மேம்படுத்துவதாக உள்ளது, இது வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றினைச் சரிசெய்வதாகவும், மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் பேரிச்சம்பழத்தினை எடுத்துக் கொண்டால் உடல் எடை நிச்சயம் குறையும்.
காரணம் இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால்தான், மேலும் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த பெண்கள், உடல் நலம் குன்றியவர்கள், முதியோர்கள் என அனைவரும் கட்டாயம் பேரிச்சம்பழத்தினை ஒன்று என்ற அளவில் எடுத்துக் கொண்டால் அவர்களின் உடல் வலிமையானது நிச்சயம் அதிகரிக்கும்.
மேலும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது,