மணத் தக்காளி வயிற்றுப் புண், தொண்டைப் புண், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு முதல் தீர்வாக உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்ததே ஆகும். மணத் தக்காளியில் பொதுவாகக் குழம்பு, கூட்டு, பொரியல், ஊறுகாய், ரசம், ஜூஸ் என அனைத்து வகைகளிலும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால் மணத் தக்காளி ஜூஸினைக் குடித்துவந்தால் மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். மேலும் வெயில் காலங்களில் உடல் சூடு ஏற்பட்டால் மணத்தக்காளி ஜூஸினை குடித்து வந்தால், உடல் சூடு காணாமல் போகும்.
மேலும் சளி, இருமல், மார்புச் சளி பிரச்சினை இருப்பவர்களுக்கும் மணத் தக்காளி மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மணத் தக்காளியை எடுத்துக் கொண்டால் விரைவில் மலச் சிக்கலில் இருந்து மீள்வர்.
இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இதயத்தின் நலனைப் பாதுகாக்கச் செய்கின்றது.