பொதுவாக மனிதர்களுக்கு 50 வயதைத் தாண்டி விட்டாலே வயோதிக மாற்றங்கள் தெரிய வரும். முகத்தில் சுருக்கம் விழுவது, முடி நரைப்பது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, செல்கள் பலவீனமடைவது போன்றவை வயோதிகத்தின் அறிகுறிகளாக உள்ளது. ஆனால் நாம் உண்ணும் உணவில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே என்றும் இளமை ஊஞ்சலாடும் வகையில் ஆரோக்கியமாக இருக்கலாம்.
உடலுக்கு உட்டச்சத்தினைத் தரும் ஓட்ஸ் கஞ்சி, தானியங்கள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் கடல் உணவுகள், முட்டை, புரதச் சத்து நிறைந்த கொட்டைகள் பட்டாணி போன்றவை நல்ல சக்தியைக் கொடுக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவுவகைகளான கோதுமை, காய்கறிகள் போன்றவை சாப்பிடலாம். இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் இதய நோய் அபாயத்தினைக் குறைக்கிறது. மேலும் நீரிழிவு நோய் அபாயத்தையும் குறைக்கிறது. நார்ச்சத்து உணவுகள் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
சர்க்கரை வியாதிக்கு என தனி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? முழு விவரங்கள்..!
தினசரி நடைப் பயிற்சி கண்டிப்பாக வேண்டும். நடைப்பயிற்சி உங்கள் மூளை மற்றும் உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் புகைப்பழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றைக் கை விட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும். நல்ல கொழுப்பு உள்ள ஆலிவ் எண்ணெய், அவகோடா போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
மேலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம். இதுபோன்ற பல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் முதுமை ஒரு தடையே இல்லை என்பது போல் என்றும் சுறுசுறுப்பாக வாழ்வாங்கு வாழலாம்.