ஜீ தமிழ் டிவியில் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடிய சிறுவன்.. உருகிய நடுவர்கள்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

ஜீ தமிழ் டிவியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 2024 இசை நிகழ்ச்சியில் ஞாயிறன்று பக்தி பாடல்களை பாடிய சிறுவர்கள் அனைவருமே மெய்சிலிர்க்க வைத்தார்கள். அதிலும் கர்ணன் படத்தில் வரும் ” உள்ளத்தில் நல்ல உள்ளம்..”…

zee tamil tv

ஜீ தமிழ் டிவியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 2024 இசை நிகழ்ச்சியில் ஞாயிறன்று பக்தி பாடல்களை பாடிய சிறுவர்கள் அனைவருமே மெய்சிலிர்க்க வைத்தார்கள். அதிலும் கர்ணன் படத்தில் வரும் ” உள்ளத்தில் நல்ல உள்ளம்..” என்ற பாடலைப் பாடிய சென்னையைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் திவினேஷ் நடுவர்களை மட்டுமல்லாது அரங்கத்தில் இருந்த அனைவரையும், தொலைக்காட்சி வழியாக பாடலைக் கேட்டவர்களையும் கண் கலங்க வைத்து விட்டான்.

ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

வீட்டில் தாத்தா சொல்லிக்கொடுத்து பாடல் கற்றுக்கொண்ட திவினேஷ்க்கு இசையை அடிப்படையில் இருந்து கற்றுத்தருவதாக சொல்லியிருக்கிறார் நடுவர். இது ஒரு பக்கம் இருக்க மாணவனின் கல்வி செலவு முழுவதையும் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டு அதற்கான சான்றிதழை அந்த மாணவனுக்கு கொடுத்தார்கள். அதை பெற்றுக்கொள்ளும் போது கூட என்ன நடக்கிறது. நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று கூட அந்த குழந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப்பார்த்த பெற்றவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது

சிறுவன் திவினேஷ் பாடிய ஒவ்வொரு பாடலுமே அனைவராலும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இனி ஒவ்வொரு வாரமும் திவினேஷ் பாடுவதை கேட்பதற்காகவே சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது என்பது உண்மை.