யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது தந்தை இசைஞானி இளையராஜா ஆவார். சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வத்தை கொண்டிருந்தவர் யுவன் சங்கர் ராஜா. சினிமாவில் ஹிப் ஹாப் இசையையும் ரீமிக்ஸ் கலாச்சாரத்தையும் தொடங்கி பிரபலப்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா. 1997 ஆம் ஆண்டு அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா.
1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து துள்ளுவதோ இளமை, மனதை திருடி விட்டாய், நந்தா, ஏப்ரல் மாதத்தில், மௌனம் பேசியதே, புன்னகை பூவே என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் பணியாற்றி அனைவரின் விருப்பமான இசையமைப்பாளராக மாறினார் யுவன் சங்கர் ராஜா. இளைஞர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்கும் போது விரும்பி கேட்பது இவருடைய பாடல்கள் தான். அப்படி இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா.
தற்போதும் யுவன் சங்கர் ராஜா பாடல்கள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் அனிருத் உச்சத்தில் இருக்கிறார். மேலும் தற்போது சாய் அபயங்கரும் பல படங்களை கைவசம் பிடித்து வைத்திருக்கிறார். இதனால் நாமும் தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று நினைத்த யுவன் சங்கர் ராஜா தனது இசை பயணத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் அதற்கு இசையமைக்கலாம் என்ற முடிவெடுத்திருக்கிறாராம். மேலும் சத்தியபாமா யுனிவர்சிட்டி நிறுவனர் வீட்டு திருமணத்தில் கச்சேரியும் நடத்தியுள்ளாராம் யுவன் சங்கர் ராஜா. அனிருத் சாய் அபயங்கர் வரிசையில் இவரது சகோதரர் கார்த்திக் ராஜாவின் மகன் எத்தீசுவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக பேசப்படுகிறது. அதனால் அதற்கு முன்னதாகவே நாமும் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
