விக்ரம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, உல்லாசம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் விக்ரம். 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விக்ரம்.
தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா என 2000 களின் ஆரம்பகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விக்ரம்.
2010 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் விக்ரம். சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றவர். தற்போது இவர் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான நேர்காணலில் விக்ரம், SJ சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படத்தை பற்றிய பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துத்துள்ளனர்.
அதில் SJ சூர்யா இப்படத்தில் விக்ரமின் நடிப்பை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், விக்ரமின் வாழ்க்கையே ஒரு படம் மாதிரிதான். அவர் இந்த படத்தில் மிகவும் மெனக்கெட்டு அருமையாக பெர்பார்ம் செய்து இருக்கிறார். தூள் படத்தில் விக்ரம் எப்படி இருந்தாரோ அதே விக்ரமை வீர தீர சூரன் படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று புகழ்ந்திருக்கிறார் SJ சூர்யா.