கோலிவுட் திரையுலகில் தயாராகிவரும் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் யோகிபாபு நடித்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மாஸ் நடிகர்களின் படங்கள் முதல் அறிமுக நடிகர்களின் படங்கள் வரை அனைத்து படங்களிலும் அவர் தலைகாட்டி வருகிறார்
தற்போது அவர் சுமார் 15 படங்களில் நடித்து வருவதாகவும் அவற்றில் ஐந்து படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி எந்த ஒரு படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை என்றும் அந்த அளவிற்கு அவர் திட்டமிட்டு கால்ஷீட்டுகளை கொடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
மேலும் அனைத்து படங்களிலும் ஒரே கெட்டப்பில் தான் அவர் நடித்து வருகிறார் என்பதால் அவரது மேக்கப்பிற்காக அதிக நேரம் செலவிடுவது இல்லை என்றும் இதனால் ஒரே நாளில் இரண்டு படங்களில் கூட அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது