பா.ரஞ்சித் தயாரிப்பில் மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபு!!

நடிகர் யோகிபாபு 2009 ஆம் ஆண்டு யோகி என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். ஏறக்குறைய 11 ஆண்டுகள் ஆன போதில் தமிழ் சினிமாவின் உச்ச கட்ட சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகராகத்…

நடிகர் யோகிபாபு 2009 ஆம் ஆண்டு யோகி என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். ஏறக்குறைய 11 ஆண்டுகள் ஆன போதில் தமிழ் சினிமாவின் உச்ச கட்ட சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்து வருகிறார்.

இதுவரை 121 படங்களில் நடித்துள்ள இவர் 14 படங்களைக் கையில் வைத்துள்ளார். யோகிபாபுவிடம் கால்ஷிட் வாங்க முடியாத அளவு அடுத்த ஆண்டுவரைக்கும் ஃபுல்லாக கால்ஷிட் கொடுத்துவிட்டார் என்றால் பார்த்துங்கோங்களே எவ்வளவு பிஸின்னு.

இவர் கோல மாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்க அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது. அதேபோல் கூர்கா படத்திலும் கதாநாயகனாக இவர் நடிக்க, அதுவும் ஹிட்டானது.

5429b9f35f7e35987127c82c18560675

தற்போது யோகிபாபு இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ படத்தில், நடித்து வருகிறார். யோகிபாபு பேய் மாமா படத்தில் நயன் தாரா, சமந்தா, தமன்னா என்று 3 கதாநாயகிகளைக் காதலிக்கிறார்.

இப்படி முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துவரும் யோகிபாபு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் யோகிபாபுவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விரைவில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன