மார்ச் 8 அதுவும் மகாசிவராத்திரி அன்று உலக பெண்கள் தினம் வருகிறது. பெண் என்பவர் வெறும் கவர்ச்சிகரமான பொம்மைகள் அல்ல. இன்றைய காலத்தில் பல துறைகளிலும் கோலோச்சி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. என்றாலும் 2013க்குப் பிறகு பல படங்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
கோலமாவு கோகிலா
2018ல் வெளியான காமெடி படம். படத்தில் முக்கிய ரோலில் நயன்தாரா நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய மாபெரும் வெற்றிப் படம். யோகிபாபு, சரண்யா, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கனா
2018ல் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான படம். ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்பட பலர் நடித்த படம். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்த படம் பாராட்டுக்குரியது தான்.
அறம்
2017ல் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமச்சந்திரன் துரைராஜ், சுனுலட்சுமி, விக்னேஷ், ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அருவி
2017ல் அருண்பிரபு இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு கதை எழுதி தயாரித்து நடித்த படம். பெண் சமூகத்தில் படும் கடும் வேதனையை சுட்டிக் காட்டுகிறது. படத்தில் அருவியாக அதிதி பாலன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதிச்சுற்று
2016ல் வெளியான படம் இஞதிச்சுற்று. கதை எழுதி
சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மாதவன், ரித்திகா சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் மும்தாஜ், நாசர், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பெண் இயக்குனர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாயா
2015ல் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த படம். இது ஒரு திகில் படம். அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். நயன்தாரா, ஆரி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பிளஸ் பாயிண்ட் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் தான்.
இந்த லிஸ்ட்டில் நயன்தாராவே அதிக படங்களில் நடித்து பெருமை சேர்த்துள்ளார் என்பதால் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கின்றனர். தைரியம், தன்னம்பிக்கை, பர்சனாலிட்டி என பல சிறப்பம்சங்களைக் கொண்டு படத்தில் நடித்து பெண்களுக்கு பெருமை சேர்த்தவர் நயன்தாரா என்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை லேடி சூப்பர்ஸ்டாராகவே பவனி வருகிறார்.