இன்று பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார். இவர் நடிகை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் 44 படங்களை இயக்கிய முதல் பெண் இயக்குனர் என்பதால் கின்னஸிலும் இவர் இடம் பிடித்தது வரலாறு. ஒரு சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும் 60களில் இவர் நடித்த பணமா பாசமா படப்பாடலான எலந்தப்பழம் எலந்தப்பழம் செக்க சிவந்த பழம் என்ற பாடல் உலக புகழ்பெற்றது. எல். ஆர் ஈஸ்வரி இப் பாடலை பாடி இருந்தாலும் அதில் நடித்து இருந்த விஜய நிர்மலா நன்றாக நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஆடி ஆடி பழம் விற்பார்.
ஊரெங்கும் எல்லோரும் கொண்டாடும் குத்துப்பாடலாக இப்பாடல் அந்தக்காலத்தில் ஓங்கி ஒலித்தது.
காலம் பல கடந்தாலும் ரீமிக்ஸ் வடிவில் கூட இப்பாடல் வருகிறது. இப்பாடலை கிராமத்து திருவிழாக்களில் நடக்கும் நடனங்களிலும் , பாட்டுக்கச்சேரிகளிலும் இப்பாடல் இல்லாமல் களைகட்டுவதில்லை.
இப்பாடல் இரட்டை அர்த்தமுள்ள பாடல் என பலரால் விமர்சிக்கப்பட்டாலும் விமர்சனத்தை மீறி இன்று வரை இப்பாடல் தெறி ஹிட்.
விஜய நிர்மலான்னா யார்னு தெரியாதுன்னு சொல்றவங்களுக்கு கூட அவர் நடித்த எலந்தப்பழம் பாடலை சொன்னால் உடனே புரிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரசித்தம் அந்த பாடல்.