இவர் இல்லைன்னா நான் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது… சந்தானம் உருக்கம்…

By Meena

Published:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். எதார்த்தமான ‘counter comedy’ செய்து தனக்கென தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை தக்க வைத்திருப்பவர் சந்தானம்.

ஆரம்பத்தில் 2000 களில் சின்னத்திரை விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘லொள்ளு சபா’ வில் பங்கேற்றார். அனைவரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியான லொள்ளு சபா அந்நேரத்தில் பிரபலமடைந்தது. இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இவரின் திறமையை கண்ட நடிகர் சிலம்பரசன் அவர் நடித்த ‘மன்மதன்’ திரைப்படத்தில் நடிக்க சந்தானத்திற்கு வாய்ப்பு வாங்கி தந்தார். கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட சந்தானம் பிரபல காமெடியனாக கவுண்டர் காமெடியனாக வலம் வந்தார்.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற திரைப்படங்களில் காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார் சந்தானம். பிறகு நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் காமெடி கலந்த ஹீரோ கதையம்சம் கொண்ட ‘தில்லுக்கு துட்டு’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘வடுகபட்டி ராமசாமி’ போன்ற திரைப்படங்களில் நடித்தார் சந்தானம்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட சந்தானம் தனது சினிமா வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாவிற்குள் வருவதற்க்கு முக்கியமான காரணம் சிம்பு அவர்கள் தான். அவர் இல்லையென்றால் நான் சினிமாவிற்குள் வந்திருக்க முடியாது என்று உருக்கமாக பேசியுள்ளார்.