isha

கமல், ரஜினி இணையும் படம் யாருக்குப் பாடம்? ரசிகர்களுக்குள் மீண்டும் மோதல் வருமா?

சமீபத்தில் ரஜினி, கமல் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் புரொமோ இன்று நண்பகல் 12.7க்கு வெளியாகிறது. கமலுக்கு இது 238வது படம். ரஜினிக்கு 174வது படம். படத்திற்கு கேஎச்.ஆர்கே என்று…

சமீபத்தில் ரஜினி, கமல் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் புரொமோ இன்று நண்பகல் 12.7க்கு வெளியாகிறது. கமலுக்கு இது 238வது படம். ரஜினிக்கு 174வது படம். படத்திற்கு கேஎச்.ஆர்கே என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்னர்.

முதல் நாளில் 7.12க்கு போஸ்டர் அறிவிப்பு என்றும், 2வது நாளில் 12.7க்கு புரோமோ என்றும் அறிவித்தது ஏன்? இதுல கமலின் பிறந்தநாளை முதலிலும், ரஜினியின் பிறந்தநாளை 2ம் நாளிலும் போட்டு பேலன்ஸ் பண்ணி விட்டார்கள். ரஜினிதான் டைட்டிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்.

அவர் என்னதான் இருந்தாலும் கமல்தான் தனக்கு முன் இருந்த ஹீரோ. தனது ஆருயிர் நண்பன். அவருடன் 18 படங்கள் நடித்து விட்டார். அடுத்து தனித்தனியாக பிரிந்து நடிப்போம் என்று வழிகாட்டியவரும் கமல் தான் என்பதால் ரஜினி விட்டுக் கொடுத்திருக்கலாம். கமலை விட 4 வயது மூத்தவர் ரஜினி. ஆனால் சினிமாவைப் பொருத்தவரை கமல் சீனியர். கமலுக்கு சினிமாவில் 65 ஆண்டுகள் அனுபவம். ரஜினிக்கு இது பொன்விழா ஆண்டு.

வயது, சினிமாவில் தற்போதைய மார்க்கெட் அடிப்படையில் என்று பார்க்கும்போது ரஜினி பெயர்தான் முதலில் போட வேண்டும். ஆனால் ரஜினியே விட்டுக் கொடுத்து இருப்பதால் தான் கமல் பெயர் முதலில் போடப்பட்டுள்ளது.

இவர்களது நட்பைப் பார்த்து இளம் நடிகர்கள் ஒற்றுமையாக இருக்கக் கத்துக் கொள்ள வேண்டும். திரும்ப எங்களைப் பார்த்துக் கத்துக்கோங்கடா என்று மற்றவர்களும் தெரிந்து கொள்ளத்தான் இவர்கள் இருவரும் இப்போது இணைந்து நடிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றும் ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருக்கத்தான் செய்கிறது.

அவர்களுக்கு இடையே ஒருவர் படத்தை இன்னொருவர் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இரு தரப்பு ரசிகர்களும் இரு படங்களையும் நிச்சயமாகப் பார்த்து விடுவார்கள். ஆனால் ஆரோக்கியமற்ற ரசிகர் சூழலைக் கொண்டு வந்தது விஜய் தான்.

கொளுத்திப் போடலாமான்னு சொல்வார். அந்தப் புத்தி அவருக்குத்தான் உண்டு. அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருந்தது அப்படித்தான். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.