தமிழ்த்திரை உலகில் வெவ்வேறு காலகட்டங்கள்ல வெவ்வேறு விதமான காமெடி நடிகர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அந்தவகையில் ஆரம்பத்தில் என்எஸ்கே. கலைவாணர் ஆக வந்து ரசிகர்களின் மத்தியில் சிரிப்புடன் சிந்தனையையும் கலந்தார். அதே பாணியைக் கடைபிடித்து சின்னக் கலைவாணர் ஆனவர் விவேக். அவருக்கு முன்பு நாகேஷ், வி.கே.ராமசாமி, டிஎஸ்.பாலையா, டணால் தங்கவேலு, கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ்.சந்திரன், ஜனகராஜ், வையாபுரி, தாமுன்னு பல காமெடி நடிகர்கள் வந்தார்கள்.
அப்புறம் சூரி, சந்தானம் வந்தனர். இப்போ யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி நடித்து வருகின்றனர். எல்லாருமே அவங்க அவங்க பாணியில திறமையா நடிக்கிறாங்க. அந்த வகையில் காமெடியில் இருந்து ஹீரோவுக்கு சூரி மாறியதும் கொட்டுக்காளி, கருடன், விடுதலை மாதிரி நல்ல கதைகளம் கொண்ட படங்களில் நடிக்கிறார்.
ஆனால் அவருக்கு முன்பே ஹீரோவானவர் நடிகர் சந்தானம். இவர் இன்னும் நார்மல் காமெடி படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பது ஏன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். சூரி குணச்சித்திர நடிகர் ஆகி ஹீரோவானவர்.
சந்தானம் காமெடியனாக இருந்தே ஹீரோவானவர். ரெண்டு பேரும் வெவ்வேறு பாணி. சூரி நடிக்கிற பாத்திரங்களில் சந்தானம் நடிச்சா சரியா இருக்குமா? அதே மாதிரி சந்தானம் நடிக்க வேண்டிய பாத்திரத்துல சூரி நடிச்சா சரியா இருக்குமா? அவரவருக்குன்னு தனித்தனி பாணியை வச்சிக்கிட்டு இருக்காங்க. அதுல அவங்க பயணம் செஞ்சிட்டு இருக்காங்க என்றார்.