உடனே மறுத்த ரஜினி.. அப்படியே சொன்ன விஷயம்.. கேட்டு ஷாக்கான இயக்குனர்

By Keerthana

Published:

பொதுவாக ரஜினியின் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தவை. அதில் பல படங்களின் பெயர்கள் புதிய படங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, பில்லா உள்பட சில படங்கள் ரீமேக் ஆகி உள்ளன.

ஆனால் ரஜினி ஒரு நாளும் தான் நடித்த ஒரு படத்தை இன்னொரு பாகம் எடுக்க விரும்பியதே கிடையாது. பேய் படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட்டி அடித்த பிறகு தான் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசைகள் இயக்குனர்களுக்கு பிறந்துள்ளது. அப்படி இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட சில படங்கள் ஹிட் அடித்துள்ளன. ஆக்சன் படங்களுமே ஹிட் அடித்துள்ளன.

இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ஒரு படத்தை மீண்டும் படமாக்க வேண்டும் என்று இயக்குனர் ஒருவர் போய் கேட்டிருக்கிறார். இப்போது எல்லாம் இரண்டாம் பாகம் எடுப்பது அதிகமாக உள்ளது. நான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று இருக்கிறேன்.. நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? அந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் பெரிய நடிகர்கள், அவர்களின் வேடத்திற்கு வேறு ஒருவரை நடிக்க வைத்து அந்த படத்தை கெடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் வேறு ஒருவரை வைத்து அந்த படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டாராம் ரஜினி.

ரஜினி நடிக்க மறுத்த அந்த படத்தின் பெயர் சந்திரமுகி 2. இந்த படத்தில் ரஜினியை நடிக்க கேட்டவர் வாசு. பிரபல இயக்குனர் வாசு சந்திரமுகி படத்தை லாரான்ஸை வைத்து இயக்கி உள்ளார். வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த காலத்தின் டிரெண்டிற்கு ஏற்ப எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். பாபா படத்தின் தோல்விக்கு பிறகு வருத்ததில் இருந்த ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது சந்திரமுகி தான். இந்நிலையில் ரஜினியின் வேடத்தில் அவரது ரசிகரான லாரன்ஸ் நடித்திருக்கிறார். எந்த அளவிற்கு கதை விறுவிறுப்பாக போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது ஒருபுறம் எனில், ரஜினி ஜெயிலர் படத்தை முடித்த கையோடு சில மாதங்கள் ஓய்வில் இருக்க போகிறாராம். அதன்பின்னர் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் உடன் புதிய படத்தில் நடிக்க போகிறாராம். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

ரஜினிகாந்த் அரசியலில் என்ட்ரி இல்லை என்று அறிவித்தாலும், சினிமாவில் புயல் வேகத்தில் என்ட்ரியாகி உள்ளார். வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். ரஜினி 72 வயதிலும் இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுத்து மாஸ் ஹீரோ என்பதை நிரூபித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இன்றைய இளம் இயக்குனர்களின் திறமையை மதித்து அவர்களுடன் கரம் கோர்ப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். அந்த வகையில் தான் ஜெயிலர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.