விஜய் சமீபத்தில் தனது கடைசி படம் இதுதான் என்றும் அதற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதி ஆகிவிடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார். தமிழக வெற்றிக்கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டார். இந்த நிலையில் அவருக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதி அதாவது ஆசிரியர் தினத்தன்று கோட் திரைப்படம் வெளியாகிறது.
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்பட பல முக்கிய ஹீரோக்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜியில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தைப் படமாகத் தான் பார்க்க வேண்டும். அங்கு அரசியலைப் புகுத்தக்கூடாது என தனது ரசிகர்களுக்கு விஜய் கட்டளையிட்டுள்ளார்.
அதன்படி கோட் படம் வெளியிடும் திரையரங்குகளில் தனது கட்சியின் பெயரையோ, கொடியையோ வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். கோட் படத்தின் ஆடியோ லாஞ்சைக்கூட அதனால் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டார். செப்டம்பர் 25ம் தேதி மாநாடு நடத்த இருப்பதால் ஆடியோ லாஞ்சும் இருந்தால் நல்லாருக்காது என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் விஜய்.
ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கும் விஜய் திடீரென சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் அரசியலுக்கு வருவதால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தனது கடைசி படமாக தளபதி 69 டைட்டிலுடன் படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.
அதன்பிறகு முழுநேர அரசியல் வாதியாகப் போகிறார். அப்படி என்றால் சினிமாவில் அவரது இடத்தை நிரப்புவது யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. இதைப் பற்றி பிரபலம் என்ன சொல்கிறாருன்னு பார்க்கலாமா…
விஜய் நடிக்கிறதை நிறுத்திட்டு அரசியலுக்குப் போகப் போறாரு. அப்போ அவரோட வெற்றிடத்தை யார் நிரப்புவாங்கன்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கிறார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார்னு பாருங்க.
இந்தக் கேள்விக்கு நீங்க ஏதோ ஒரு பதிலை எதிர்பார்க்கறீங்கன்னு நினைக்கிறேன். அந்தப் பதில் வர்ற வரைக்கும் இப்படி தொடர்ந்து கேள்வியைக் கேட்குறதுன்னு சில ரசிகர்கள் முடிவு எடுத்துருக்குற மாதிரி தெரியுது.
விஜய் முதல்ல அரசியலுக்குப் போகட்டும். போனதுக்குப் பின்னால ஒரு வெற்றிடம் உருவாகட்டும். உருவானதுக்குப் பின்னால நிச்சயமாக காலம் அந்த இடத்திற்கு ஒருவரை அடையாளம் காட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.