ஷம்சுதீன் இப்ராஹிம் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் ஷாம் மதுரையில் பிறந்தவர். பெங்களூரில் வளர்ந்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பி.காம் படிப்பை முடித்த பின்பு மாடலிங்கில் ஆர்வம் கொண்டு அதற்க்கான பயிற்சியை எடுத்தார் ஷாம்.
நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஷாம் ஆரம்பத்தில் பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்தார். மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் நான்கு வருடங்களாக வாய்ப்பினை தேடிக் கொண்டிருந்தார் ஷாம்.
1999 ஆம் ஆண்டு ‘காதலர் தினம்’ படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றார். ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் 12 B படத்தில் நடிக்க விபு கிடைத்தது. இப்படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றார் ஷாம். பின்னர் ‘குஷி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார் ஷாம்.
தொடர்ந்து ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’, ‘இயற்கை’, ‘லேசா லேசா’, ‘உள்ளம் கேட்குமே’, ‘மனதோடு மழைக்காலம்’ , ‘தில்லாலங்கடி’ போன்ற ஹிட் படங்களில் நடித்தார் ஷாம். தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கொண்டவர்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஷாம், நான் 2002 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் வந்தேன். நான் வந்த காலத்தில் தான் தனுஷ், சிம்பு, ஜீவா,சூர்யா ஆகியோர் நல்ல சினிமா பின்புலத்தோடு வந்தார்கள். நான் நிறைய படம் பண்ணனும்னு நினைச்சேன். அப்போ டைரக்டர்கள் எல்லோரும் அவங்களோட கமிட்டாகி இருந்தாங்க. அதுக்காக நான் அவங்களை குறை கூறவில்லை. அந்த நேரத்தில் அப்படி நடக்கும்னு நினைக்கல என்று எமோஷனலாக பேசியுள்ளார் ஷாம்.