நான் அம்பேத்கர் வேஷம் போட்டு வெளியே வந்ததும் ஒருத்தர் என் காலில் விழுந்துட்டார்… அம்பேத்கர் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த மம்முட்டி…

By Meena

Published:

முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரைக் கொண்ட மம்முட்டி மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

1971 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான மம்முட்டி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பணியாற்றி வருகிறார். 90 கள் மற்றும் 2000 களின் ஆரம்ப காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும் வணீக ரீதியாகவும் வெற்றிப் பெற்ற படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தவர் மம்முட்டி.

2002 ஆம் ஆண்டு தமிழில் ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தனது அபாரமான நடிப்பினால் மாநில திரைப்பட விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது ஆகியவற்றை வென்றவர் மம்முட்டி.

இது தவிர, மலையாளத் தொலைக்காட்சி சேனல்களான கைரளி டிவி , கைரளி நியூஸ் மற்றும் கைரளி வீ ஆகியவற்றை நடத்தும் மலையாள கம்யூனிகேஷன்ஸின் தலைவராக உள்ளார் . விநியோக-தயாரிப்பு பேனர், ப்ளேஹவுஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பனி உட்பட பல தயாரிப்பு முயற்சிகளின் உரிமையாளர் ஆவார்.

தற்போது ஒரு பட விழாவில் கலந்துக் கொண்ட மம்முட்டி, அம்பேத்கர் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், நான் அம்பேத்கர் வேஷம் போட்டு வெளியே வந்ததும் ஒருத்தர் என் காலில் ஓடி வந்து விழுந்தார். அவர் மம்முட்டியின் ரசிகர் என்று நினைத்தேன், ஆனால் அவர் அம்பேத்கரின் ரசிகர் என்று பின்பு புரிந்துக் கொண்டேன் என்று பகிர்ந்துள்ளார் மம்முட்டி.