என்னது… இந்த விஷயத்தில் ஷங்கரை மிஞ்சிவிட்டாரா அட்லி…

By Meena

Published:

பாலிவுட்டில் நடிகர் ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கிறார் அட்லி. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி 2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே ஹிட்டாகி வெற்றி படமானது.

அதன் பின்பு நடிகர் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே, 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் ‘தெறி’ படத்தை இயக்கி வெளியிட்டார். அது மெகாஹிட் ஆனது. அட்லியின் மீது நடிகர் விஜய்க்கு நம்பிக்கை இருந்ததால் அடுத்ததடுத்து இரண்டு படங்களான மெர்சல் (2017) மற்றும் பிகில் (2019) ஆகிய படங்களை இயக்கினார் அட்லி. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. மெர்சல் படத்தில் வரும் ‘ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே’ என்ற பாடலும் பிகில் படத்திலிருந்து ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலும் உலகளவில் பிரபலம் ஆனது. கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த பாடல்கள்.

தொடர்ச்சியாக நான்கு வெற்றி படங்களை இயக்கிய அட்லிக்கு பாலிவுட் கதவு திறந்தது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் ஷாருகானை வைத்து ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கினார். ஷாருகானின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இப்படம் மரண மாஸான வெற்றி பெற்று உலகளவில் 1100 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார் என்றே சொல்லலாம். இவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர்கள் தயாராக உள்ளனர்.

ஆனால் இயக்குனர் அட்லி பாலிவுட்டை சற்று வெய்ட்டிங்கில் வைத்து விட்டு, ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் மற்றும் ப்ரீ ப்ரொடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்திற்காக அட்லி கேட்டிருக்கும் சம்பளம் அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது. ‘ஜவான்’ படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் அட்லி. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை டபுள் மடங்காக கூட்டியுள்ளாராம். அதன் படி நடிகர் அல்லு அர்ஜுனின் தெலுங்கு படத்திற்காக 60 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். அதற்கான ஒப்பந்தமும் பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பள விஷயத்தில் தனது குருவான இயக்குனர் ஷங்கரையே மிஞ்சி விட்டார் அட்லி என்று பலதரப்பினரும் பேசி வருகின்றனர்.