அஜீத் ஷாலினி புரிதல் மாதிரி இருந்துட்டா தம்பதியருள் பிரச்சனையே இல்லையே…!

By Sankar Velu

Published:

இப்போதெல்லாம் எதுக்கு எடுத்தாலும் சந்தேகப்படற தம்பதியர்களால் தான் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகிறது. குடும்பத்தில் விரிசல் உண்டாகிறது. ஆனால் அன்று அந்தக் காதலர்கள் அப்படி புரிந்து நடந்துள்ளனர்.

2000ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு அன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அலைபாயுதே. மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா, விவேக், பிரமிட் நடராஜன் உள்பட பலர் நடித்துள்னர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இது ஒரு காதல் படம். படத்தில் மாதவன், ஷாலினி காட்சிகள் மிகவும் நெருக்கமாக இருக்கும்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சிநேகிதனே, செப்டம்பர் மாசம், ஏடி ஏடிடி, பச்சை நிறமே உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. படத்தின் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கும். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஷாலினி, அஜீத் காதல் மலர்ந்து விட்டதாம்.

அப்படி இருக்க இந்தப் படத்தில் எப்படி ஷாலினியை நடிக்க வைக்க அஜீத் சம்மதித்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் பிரபலம் ஒருவர் இதற்குப் பதில் சொல்லி இருக்கிறார். வாங்க. என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

அஜீத், ஷாலினி லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு தான் ஷாலினி அலைபாயுதே படத்துல நடிக்கிறதுக்குக் கமிட் ஆனாங்க. அலைபாயுதே படத்துல ஷாலினி கமிட் ஆனபோது மாதவன் கூட நெருக்கமா நடிக்க கூடாது.

இந்தப் படத்துல நீ நடிக்கவே கூடாதுன்னு அஜித் ஒரு சில கண்டிஷன்கள் எல்லாம் போட்டாருன்னு சொல்றாங்களே… அது உண்மையா?ன்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார்.

Alaipayuthe
Alaipayuthe

அதற்கு அவர் சொன்ன பதில் இது தான். அலைபாயுதே படத்துல ஷாலினி நடிப்பதற்கு அஜீத் மட்டும் ஒப்புதல் தராமல் இருந்து இருந்தால் நிச்சயமாக ஷாலினி நடித்திருக்கவே மாட்டார். அப்படிப்பட்ட எந்த நிபந்தனையையும் ஷாலினிக்கு அஜீத் விதிக்கவில்லை என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என தமிழ்சினிமா உலகில் மனமொத்த காதல் தம்பதியர்களாக உலா வருபவர்கள் ஒரு சிலர் தான். பெரும்பாலானோருக்கு எளிதில் விவாகரத்து ஆகி விடுகிறது. அதற்கு என்ன காரணம்னா முதலில் ஈகோ. அடுத்து கருத்து வேறுபாடு.

ஆனால் எது வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகும் வாழ்க்கையில் தான் இன்பம் உள்ளது என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை. அதை அறிந்தவர்கள் இந்த ஸ்டார் தம்பதியர்களைப் போல வாழ்வில் மின்னுகிறார்கள்.