தலைப்புல உள்ள கேள்வியைப் பார்த்ததும் தலையே ‘கிர்…’னு சுத்துதா? எப்படித் தான் இப்படி எல்லாம் கேட்பாய்ங்களோ? ரூம் போட்டு யோசிப்பாங்களான்னு தான் சந்தேகம் வருது. பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனின் லென்ஸ் நிகழ்ச்சியில் நேயர் ஒருவர் தான் இவ்வளவு கஷ்டமான கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு சித்ரா லட்சுமணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போமா…
25லருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா படத்தோட ஒளிப்பதிவாளர் தான் அந்தப் படத்தோட கேமராவையும் கையாள்வார். கடந்த 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளர் என்ற பெயர் போய் ஒளிப்பதிவு இயக்குனர் என்ற அவரது பெயரிலே ஒரு மாறுதல் ஏற்பட்டது.
ஒளிப்பதிவு இயக்குனர் என்பவர் காட்சிக்கான கோணத்தைத் தீர்மானித்து விட்டு லைட்டிங் எல்லாம் முடிச்சிட்டு இயக்குனரோடு மானிட்டர்லயே அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்வார்.
ஒளிப்பதிவு இயக்குனரோட முதல் உதவியாளர் தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வார். அவர் தான் கேமராவை எல்லாம் கையாள்வார். அதுதான் இப்போ நடைமுறையில் இருக்கிறது. இதுதான் ஒளிப்பதிவு இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் உள்ள வித்தியாசம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவைப் பொருத்த வரை ஒளியும், ஒலியும் இணைந்தது தான். அதாவது ஒலி என்பது சவுண்டு. ஒளி என்பது நாம் திரையில் காண்பது. படமாகக் காட்சிப்படுத்துவது தான் ஒளிப்பதிவாளரின் வேலை.
நாம் போக முடியாத இடங்களுக்கு எல்லாம் நேரடியாகப் போய் அங்குள்ள இயற்கை அழகையும், மலைப்பிரதேசங்கள், பனிமலைகள், கடல், ஆகாயம் என பல வியத்தகு இடங்களை அழகாகத் திரையில் காட்டி நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுவார் ஒளிப்பதிவாளர். ஒரு படத்தோட வெற்றிக்கும் இவரது பங்கு அளப்பரியது.
ஒளிப்பதிவாளரின் திறமை அவர் மனதில் தோன்றியதை அப்படியே காட்சிப்படுத்தி விடுவார். அற்புதமான கற்பனைத்திறன் உள்ளவர்களின் ஒளிப்பதிவு நமக்கு பெரிய விருந்தாகவே அமைந்து விடும். அந்தக் காலத்தில் கர்ணனின் ஒளிப்பதிவு என்றாலே படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வர்.
அதன்பிறகு 90களில் தங்கர்பச்சானின் ஒளிப்பதிவை பிரமாதமாகப் பேசினார்கள். அவரை திரை ஓவியம் என்று தான் குறிப்பிடுவர். சாதாரண முட்புதர் காடுகளைக் கூட திரையில் அழகாக செதுக்கி காட்சிப்படுத்தி இருப்பார். அழகி படத்தைப் பார்த்தால் தெரியும்.
இந்தப் படத்தின் இயக்குனரும் அவர் தான். ராஜீவ் மேனன், நீரவ் ஷா, டான் மகர்துர், ஆர்.டி.ராஜசேகர், ரவி வர்மன், ஜீவா, மணிகண்டன், ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஆகியோர் தற்போதைய டாப் 10 ஒளிப்பதிவு இயக்குனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.