தமிழ் மொழியை தமிழ் சினிமாவை உலகறிய செய்த ‘ஆஸ்கர் நாயகன்’ என்றால் அது இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் தான். சென்னையில் பிறந்து வளர்ந்த ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் இயற்பெயர் திலீப்குமார் என்பதாகும். இஸ்லாம் மீதித்திருந்த ஆர்வத்தால் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை ஏ. ஆர். ரஹ்மான் என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
ஏ. ஆர். ரஹ்மான் தமிழ், மலையாளம், இந்தி,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான். சிறு வயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வத்தை கொண்டவர்.
ஆரம்பத்தில் விளம்பர படங்களுக்கு இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான், 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஏ. ஆர். ரஹ்மான். முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டானது. இப்படத்திற்காக தேசிய விருதினையும் வென்றார் ஏ. ஆர். ரஹ்மான்.
தொடர்ந்து தனது இசையால் பல படங்களை வெற்றியடையச் செய்தவர் ஏ. ஆர். ரஹ்மான். பல தேசிய திரைப்பட விருதுகள், ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, பத்மபூஷன் விருது போன்ற பல விருதுகளை வென்றவர். 2012 ஆம் ஆண்டு இவர் வாங்கிய ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. மேலும் ‘ஆசியாவின் மெர்ச்சண்ட்’ என்று அழைக்கப்படுகிறார் ஏ. ஆர். ரஹ்மான்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஏ. ஆர். ரஹ்மான், எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் அவர்கள் பாட வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக அவரிடம் இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசினோம். மூன்றாவது முறை பேசிவிட்டு ரெக்கார்டிங் போகலாம் என்று நினைத்திருந்த போது மைக்கேல் ஜாக்சன் காலமாகிவிட்டார் என்று கூறியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான்.