சுப்ரமணியபுரம் பட கிளைமாக்ஸ் ஷூட்டிங் எடுக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டோம்… சசிகுமார் பகிர்வு…

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சேது படத்தில் பணியாற்றினார். அடுத்ததாக இயக்குனர்…

sasikumar

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சேது படத்தில் பணியாற்றினார்.

அடுத்ததாக இயக்குனர் அமீரிடம் சேர்ந்து மௌனம் பேசியதே மற்றும் ராம் கிய திரைப்படங்களில் உதவி யக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கதாபாத்திராத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சசிகுமார்.

முதல் படமே வெற்றி படமாக சசிகுமாருக்கு அமைந்தது. அதற்கு அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ஈசன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு பெரிதாக பேசப்படவில்லை. அதற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிய சசிகுமார் சுந்தரபாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், அயோத்தி, கருடன் தற்போது நந்தன் ஆகிய வெற்றி திரைப்படங்களில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகுமார்.

ஒரு நேர்காலில் கலந்து கொண்ட சசிகுமார் சுப்பிரமணிய பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கில் மிகவும் கஷ்டப்பட்டோம் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் கிளைமாக்ஸ் ஷூட்டிங் அப்போது எனக்கு சுவாதிக்கும் சண்டை. சுவாதி நீங்க எப்படி நான் முதுகுல குத்துற மாதிரி எனக்கு கேரக்டர் கொடுக்கலாம் அப்படின்னு சண்டை போட்டு கோவத்துல பேசாம இருந்தாங்க. அதாண்டா நமக்கு வேணும் அப்பதான் கரெக்டா நடிப்பு வரும் டிஸ்டர்ப் பண்ணாம அவங்க கோவத்துல இருக்கும்போதே கிளைமாக்ஸ் ஷூட்டிங் முடிச்சிட்டோம்.

அதுமட்டுமில்லாமல் சுவாதி கோவத்துல நல்ல பெர்ஃபார்ம் பண்ணிட்டு போயிடுச்சு. ஜெய் பாறை மேல விழுகிற மாதிரி சீன் வரும். அப்போ நான் ஜெய் கிட்ட சொன்னேன் சுவாதி நல்லா பெர்ஃபார்ம் பண்ணிடுச்சு நீ கைய வச்சிட்டு விழுகாத அப்படியே விழுந்து அடிபட்டாலும் பரவால்லன்னு சொன்னேன் இந்த இடம் உனக்கு நல்ல ஒரு பாராட்டுகளை கொடுக்கும்னு சொன்னேன். அதே மாதிரி அவன் கீழே விழுந்தான் அவனுக்கு கன்னத்துல அடியும் பட்டுச்சு. அப்படி சுப்ரமணியபுரம் பட கிளைமாக்ஸ் பல போராட்டங்களுக்கு நடுவுல தான் ஷூட்டிங் பண்னோம் என்று ஓபனாக கூறியிருக்கிறார் சசிகுமார்.