சத்யராஜ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இது சத்யராஜ் நடிப்பில் சிறந்த படமாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்த படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் கலக்கி இருந்தார். இப்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சத்யராஜின் மகன் சிபியும் இதே போல ஒரு படத்தில் நடிக்கிறார்.
வால்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அன்பு இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அப்பாவுக்கு பிறகு மகனுக்கு இது மிக பொருத்தமான பெயராக உள்ளதாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா கூறி உள்ளார்.