சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வால்டர். ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் இரண்டும் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 13 முதல் திரைக்கு வருகிறது. பல வருடங்களாக சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் சிபிராஜ்க்கு இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் பெரிய மீசையுடன் அதிரடி ஐபிஎஸ் அதிகாரியாக இவர் நடித்துள்ளதால் படத்தில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது எனவும் இதே பெயரில் இவரது தந்தை சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் படம் பெரிய வெற்றி பெற்ற செண்டிமெண்டின் அடிப்படையில் இப்படமும் பெரிய வெற்றி பெறும் என சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தை கடத்தலை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளிவருகிறது. இப்படத்தை இயக்கி இருப்பவர் அன்பு.