நடிகர் சிம்பு சந்திக்காத சர்ச்சையே கிடையாது, மனுஷன் எவ்ளோ அடிதான் தாங்குவார் சொல்லுங்க பார்க்கலாம். ஆனாலும் நம்ம சிம்புவின் நேர்மைக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உண்டுங்க.
உள்ளதை உள்ளபடி சொல்ல அவரைக்காட்டிலும் கோலிவுட்டில் தைரியம் வேறு யாருக்காதும் உண்டா என்ன? மனதில் படுவதை ஒளித்துவைக்காமல் அப்படியே பேசுவதாலோ என்னவோ, அவரின் ரசிகர்களும் அப்படியே உள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்துவரும் அவர் அவ்வப்போது தன் அம்மா மற்றும் அப்பாவுக்கு சமையல் செய்துகொடுத்து அசத்தியுள்ளார். அந்தவகையில் நேற்று நடிகர் சிம்பு விடிவி கணேஷுடன் சேர்ந்து சமையல் செய்துள்ளார்.
அப்போது விடிவி கணேஷ் வரப்போற பொண்ணுக்கு சமைக்கும் வேலையே இருக்காது போல? என்று கேட்க, நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் கோபமாக, “வரப்போற பொண்டாடி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை செய்யவா வராங்க? என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன். உங்கள மாதிரி இல்ல” என்று கோபமாக கூறினார்.
இந்த வீடியோவில் சிம்பு பேசியது பிடித்துப் போக, நடிகை பிந்து மாதவி வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும், “சரியாக சொல்கிறார் சிம்பு…
நாங்கள் அனைவரும் அவரை சந்திக்க காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.