VJ Vishal and Riya : பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது ஆரம்பத்தில் எலிமினேட்டான ஒவ்வொரு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்து பலவிதமான விஷயங்களையும் மற்ற போட்டியாளர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஃபேட்மேன் ரவீந்தர், தர்ஷா குப்தா, வர்ஷினி வெங்கட், ரியா என ஆரம்பத்திலேயே எலிமினேட்டாகி சென்றவர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுடன் பலவிதமான விஷயங்களையும் உரையாடி வருகின்றனர்.
அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் எப்படி தங்களின் ஆட்டத்தை விளையாடுகிறார்கள் என்பது பற்றியும், குறை, நிறைகள் பற்றியும் பலவிதமான கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். இதற்கு மத்தியில் விஜே விஷால் பற்றி ரியா உள்ளிட்ட பலரும் தெரிவித்த கருத்துக்கள் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பிக் பாஸ் சீசன் ஆரம்பத்தில் நிச்சயம் ஃபைனலுக்கு முன்னேறுவார் என கருதப்பட்ட ஒரு போட்டியாளர் தான் தர்ஷிகா. இவர் கேப்டனாக வீட்டுக்குள் இருந்த போதெல்லாம் மிகச் சிறப்பாக தலைமை தாங்கியதுடன் பல போட்டியாளர்கள் பிரச்சனையையும் துணிச்சலாக எதிர்கொண்டு சமாளித்திருந்தார். ஆனால் திடீரென விஷாலுடன் அவருக்கு ஒரு கிரஷ் உருவாக அவரது கேம் ப்ளான் மொத்தமாக மாறிப்போனது.
அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாக, அது ஒரு நட்புதான் என்றும் விஷால் மற்றும் தர்ஷிகா இருவருமே விளக்கம் கொடுத்தனர். இதற்கு நடுவே தர்ஷிகா வெளியேற அதற்கு விஷால் தான் காரணம் என்று பரபரப்பான கருத்துக்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அன்ஸிதாவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க அவருக்கும் விஷால் மீது ஒரு அன்பு உருவானதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து விஷாலும் அன்ஸிதாவும் மிக நட்பாக இருந்தனர். அந்த சமயத்தில் தான் அன்ஸிதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இப்படி இரண்டு சிறந்த போட்டியாளர்கள் விஷால் கொடுத்த அன்பின் பெயரில் தங்களின் திட்டத்தில் இருந்த மாறி வெளியேறியதாகவும் பல விமர்சனங்கள் உருவானது.
இது பற்றி தற்போது பிக் பாஸ் வீட்டில் நுழைந்திருந்த ரியா, விஷாலிடம் பேசுகையில், “தர்ஷிகா செல்வது வரைக்கும் அவருக்கு உங்களிடம் ஒரு விருப்பம் இருந்தது தெரிந்தது. ஆனால் அதை நீங்கள் மறுக்காமல் உங்களுக்கு விருப்பம் இருப்பது போல காண்பீத்தீர்கள். ஆனால் தர்ஷிகா வெளியே சென்ற உடனே நீங்கள் அன்ஸிதாவிடம் நெருக்கமாகி விட்டீர்கள்.
நீங்கள் அன்ஸிதா தோழி என கூறினாலும் பார்க்க அப்படி தெரியவில்லை. நீங்கள் நன்றாக ஆடிய போட்டியாளர்களை லவ் கன்டென்ட் மூலம் வெளியேற்றி விட்டீர்கள்” என கூறுகிறார். ஒரு பக்கம் இதை விஷால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் அன்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டதையும் ஒப்புக் கொள்கிறார்.
இப்படி இரண்டு சிறந்த போட்டியாளர்கள் வெளியேற விஷால் காரணம் என்று தகவல் பல நாட்களாகவே இருந்து வர தற்போது மீண்டும் வீட்டிற்கு வந்தவர்கள் அதை தெரிவித்தது விஷாலை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவே தெரிகிறது.