தமிழ் பிக் பாஸ் சீசன் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆனாலும் அது மிக மிக மோசமாக சென்று கொண்டிருப்பதாக தான் வெளியே கருத்துக்கள் பரவலாக இருந்து வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு ஆபாசமான வார்த்தைகளை பேசுவது, சம்பந்தமே இல்லாமல் நாடகங்கள் போடுவது, மறைமுகமாக போட்டியாளர்களின் குடும்பத்தையும், அவர்களின் வளர்ப்பையும் மறைமுகமாக சாடி அதன் மூலம் சண்டை போடுவது என மிக மிக இழிவாக பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த சீசனை ஆடி வருகின்றனர்.
பிக் பாஸ் ஏதாவது டாஸ்க் கொடுத்தால் கூட அதை மோசமாக ஆடுவது, மற்ற சிலரின் திட்டத்தின் படி ஏமாற்றத்துடன் ஆடி தோல்வி அடைவது என ஒருவர் கூட தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நோக்கத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டன்ட் மிக குறைவாக இருப்பதாக பார்வையாளர்களின் விமர்சனங்கள் இருந்து வர, விஜே பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், சபரி, கனி, திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்களைச் சுற்றி தான் கண்டெண்டுகள் அவ்வபோது இருந்து வருகிறது.
அவர்கூட வரமாட்டேன்..
அந்த வகையில் இந்த வாரம் Ramp Walk நடக்க, ஜோடிகள் பிரிக்கப்பட்டது. அப்போது திவாகருடன் தான் நடந்து வர வேண்டும் என பார்வதியிடம் சொல்லப்பட்டது. ஆனால் இதை ஏற்காத பார்வதி, நான் திவாகருடன் Ramp Walk செய்யமாட்டேன் என்றும், அது நன்றாக இருக்காது என்றும் கூறுகிறார். இது நியாயமான முடிவு இல்லை என்றும், மற்றவர்களுக்கு எல்லாம் வசதியாக தேர்வு செய்து விட்டார்கள் என்றும் தனக்கு மட்டும் திவாகருடன் ஜோடி சேர வைத்ததாகவும் சொல்கிறார். இதைக் கேட்டு திவாகர் முகமும் மாறிப் போக, பின்னர் அவருடன் விக்ரம் மற்றும் சபரி ஆகிய இருவரும் Ramp Walk செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் யாருக்கு இரண்டு முகம் இருக்கிறது என விஜய் சேதுபதி கேட்க, பார்வதியை குறிப்பிட்டு பேசிய விக்கல்ஸ் விக்ரம், “தனக்கு பயமே இல்லை என்று காட்டிக் கொள்ளும் பார்வதி திவாகருடன் Ramp Walk செய்ய சொன்ன போது இல்லை அவரோடு நான் நடந்தால் நன்றாக இருக்காது எனக்கூறி பின்வாங்கி விட்டார். அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் பார்வதி திவாகரின் பெயரில் அப்படி ஒதுங்கியது எனக்கு அவர் இரண்டு முகம் காட்டுகிறாரோ” என தோன்றுகிறது என விக்ரம் விளக்கமளித்தார்.

இதே போல, துஷாரும் பார்வதிக்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் அவர் வேஷம் போடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தான் நாடகமாடுவதாகவும், இரட்டை வேடம் போடுவதாகவும் விக்ரம் மற்றும் துஷார் குறிப்பிட்டதால் வேதனையடைந்த பார்வதி, எப்போதும் தான் திவாகருடன் இருப்பதால் வேறு ஒரு ஜோடி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தேன் என்றும் மற்றபடி அவரை அசிங்கப்படுத்துவதற்காக அவருடன் வரமாட்டேன் என்று நான் கூறவில்லை என்றும் தனது விளக்கத்தை விக்ரமிடம் கூறுகிறார்.
கண்ணீர் விட்ட பார்வதி..
இதே போல துஷாரிடமும் தனக்கு இரட்டை முகம் இல்லை என்பதை விளக்கி தனது வேதனையை பார்வதி வெளிகாட்டினார். ஆனால் துஷார் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாததால் இதை நினைத்து கண்ணீர் விட்டிருந்தார் பார்வதி.
ஐந்து நாட்கள் மிக ஆக்ரோஷமாக இருக்கும் பார்வதி, விஜய் சேதுபதி வரும் எபிசோடில் தன்னை பற்றி ஏதாவது பேசிவிட்டால் உடனடியாக கண்ணீர் விட தொடங்குகிறார். இதனை இரண்டு வாரமும் ஒரு வாடிக்கையாக அவர் கொண்டிருப்பதாகவும் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

