விஜே மணிமேகலை சொந்தமாக புது வீடு வாங்கி குடியேறியுள்ளார். சென்னையில் வாடகை வீட்டில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட நிலையில் இப்போது சென்னையில் புதிய வீடு வாங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திருமணம் ஆன பின்னர் மாதம் 10,000 வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். ஆனால் இன்று சென்னையில் பிரைம் லொகேஷனில் ஒரு பிரீமியம் வீடு வாங்கி இருப்பதன் மூலம் எங்களது மிகப்பெரிய கனவு நனவாகிவிட்டது.
இது என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் ஜீரோவாக எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வீட்டை புக் செய்து விட்டோம். அதன் பணிகள் எல்லாம் முடிந்து தற்போது தான் எங்கள் கைக்கு வந்தது என்று குறிப்பிட்டு ஸ்ரீ ராம ஜெயம், மாஷா அல்லாஹ் என்று பதிவிட்டு தன் பதிவை முடித்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள், சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய மணிமேகலை விஜய் டிவிக்கு மாறியதும் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிமேகலையின் குடும்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தான் மணிமேகலையின் குடும்பத்தினர் அவரோடு பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தற்போது சொந்தமாக புது வீட்டில் குடியேறி கிரகப்பிரவேசம் செய்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மணிமேகலை. நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது கனவாக தான் இருக்கும். அதை செய்து முடித்ததுமே பெரிய அளவில் சாதித்து முடித்ததாக கொண்டாடுவார்கள். ஆனால் எல்லோராலும் நினைத்த மாதிரி வீடு கட்டி விடமுடியாது. அதிலும் கணவன் மனைவி இரு வீட்டாரின் உதவியும் இல்லாமல் கணவன் மற்றும் மனைவி இருவரும் சொந்தமாக தங்களுடைய கனவு இல்லத்தை நிறைவேற்றுவது என்பது பெரிய சாதனைதான்.