கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக நீடித்த சுர்ஜித் மீட்புப்பணி அவன் இறந்து விட்டதால் நிறுத்திக்கொள்ளப்பட்டு அவன் உடல் மேலே கொண்டு வரப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவனது உடல் இன்று கல்லறையில் தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள விவேக்,
கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!
சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?
என கூறியுள்ளார் நடிகர் விவேக்