நான் தயாரிச்ச கட்டா குஸ்தி படத்தினால நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னா ஆகிருச்சு… மனம் திறந்த விஷ்ணு விஷால்…

விஷ்ணு விஷால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இளம் வயதில் கிரிக்கெட் வீரராக tnca லீக் போட்டிகளில் விளையாடி வந்தார் விஷ்ணு விஷால். 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா…

vishnu vishal

விஷ்ணு விஷால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இளம் வயதில் கிரிக்கெட் வீரராக tnca லீக் போட்டிகளில் விளையாடி வந்தார் விஷ்ணு விஷால். 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு குள்ளநரி கூட்டம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் விஷ்ணு விஷால்.

2012 ஆம் ஆண்டு நீர்ப்பறவை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று சிறந்த நடிகருக்கான சைமா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். தொடர்ந்து முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

2018 ஆம் ஆண்டு இவர் நடித்த சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் இன்றைக்கும் புகழப்பட்டு வருகிறது. தொடர்ந்து கட்டாகுஸ்தி லால் சலாம் என்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் விஷ்ணு விஷால். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார் விஷ்ணு விஷால். இவர் நடித்து தயாரித்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது ஓஹோ எந்தன் பேபி என்ற தனது தம்பி நடித்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் விஷ்ணு விஷால். இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தயாரித்த கட்டா குஸ்தி படத்தை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், கட்டா குஸ்தி படத்தை நான் தயாரித்தேன். அந்த படத்தில் கதாநாயகி தான் லீட் ரோல் என்று எனக்கு முன்னமே தெரியும். இருந்தாலும் நாம் தயாரிக்கும் படத்தில் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தான் சப்போர்ட்டிங் ரோலில் கதாநாயகனாக நான் நடித்தேன். ஆனால் அது வெளியே வேறு மாதிரி போய் சென்று விட்டது. அந்த படம் வெளிவந்த பின்னர் நிறைய போன் கால்கள் எனக்கு வந்தது. ஒரு இருபதிற்கும் மேலான படங்களில் பெண் லீட் ரோல் ஆகவும் என்னை சப்போட்டிங் ரோலிலும் நடிக்க அழைத்தார்கள். அதுதான் இந்த படத்தை தயாரித்ததன் மூலம் நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று ஆகிவிட்டது என்று பகிர்ந்து இருக்கிறார் விஷ்ணு விஷால்.