பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டிவரும் நிலையில் இன்னும் 20 முதல் 25 நாட்கள் மீதம் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரிசையாக வருகை தந்த வண்ணம் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சில காதல் தருணங்களும் அரங்கேறி இருந்தது.
சீரியல் நடிகரான அருண் பிரசாத் சீரியல் நடிகையான அர்ச்சனாவை காதலித்து வருவது ஏற்கனவே பலரும் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் சமீபத்தில் அர்ச்சனாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைசாக வருகை புரிந்திருந்தார். வந்த வேகத்தில் நேரடியாக அவர் அருணை கட்டியணைத்து கண்ணீர் வடித்திருக்க அவர்களது திருமணம் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
விஷ்ணுவிடம் காதல் சொன்ன சவுந்தர்யா
இதே போல மற்றொரு தருணத்தில் சௌந்தர்யாவின் நெருங்கிய நண்பரான நடிகர் விஷ்ணுவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தார். இவர்கள் இருவருமே பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என தெரியும் நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட் அரங்கேறி இருந்தது. தனது நண்பனான விஷ்ணுவிடம் காதலை வெளிப்படுத்துவேன் என ஏற்கனவே அறிவித்திருந்த சவுந்தர்யா, கேமராவை நோக்கி தனது தந்தையிட்மும் இதற்கு அனுமதி வாங்கும் நோக்கில் சில உருக்கமான கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
இதன் பின்னர் அனைத்து போட்டியாளர்களும் சுற்றியிருக்க, மிக வெட்கத்துடன் ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா’ என்றும் கேட்கிறார் சவுந்தர்யா. இந்த தருணத்தில் பேச வார்த்தை இல்லாமல் திணறி நிற்கும் விஷ்ணு, சில தடுமாற்றங்களுக்கு பின்னர் தனக்கு ஜாக்பாட் அடித்தது போல ஒரு உணர்வாக இருப்பதாகவும் சவுந்தர்யாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
பயப்படாதே, நான் இருக்கேன்..
உடனடியாக சுற்றி இருந்த போட்டியாளர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி அதனை இன்னும் ஸ்பெஷலான தருணமாக மாற்றி இருந்தனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் அங்கே பல சிறப்பான தருணங்களை பகிர்ந்திருந்தாலும் சவுந்தர்யாவின் தந்தை என்ன சொல்வார் என்ற பயம், விஷ்ணு மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ‘நீ உள்ளே இருக்கிறாய். உங்கள் அப்பாவை எப்படி வெளியே நான் போய் சமாளிப்பது?’ என பயப்படவும் செய்கிறார் விஷ்ணு.
அப்போது பேசும் சௌந்தர்யா, ‘நீ பயப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்’ என ஆறுதல் கூறினாலும், ‘நீ உள்ளே இருக்கிறாய். நான்தானே வெளியே செல்ல வேண்டும். எப்படி உங்கள் அப்பாவை எதிர்கொள்வது?’ என மீண்டும் கேட்கிறார் விஷ்ணு. இதற்கு தைரியமாக பதில் சொல்லும் சௌந்தர்யா, ‘நீ விடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என அவரை தோளில் தட்டி தேற்றவும் செய்கிறார். இதன் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.