12 வருட காத்திருப்புக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. மதகஜராஜா 90’s கிட்ஸ், 2K கிட்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முழுக்க மசாலாவைத் தெளித்து மணக்க வைத்திருக்கிறார்கள். விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, சோனு சூட், மனோபாலா, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே மதகஜராஜாவில் மின்னுகிறார்கள். முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு ஜாலி எண்டர்டெயினராக பொங்கல் ரேஸில் முந்துகிறது மதகஜராஜா திரைப்படம்.
சுந்தர் சி படங்கள் என்றாலே சிரிக்க வைத்தே வயிற்றைப் பதம் பார்க்கும். அந்த பார்முலா இதிலும் மிஸ் ஆகவில்லை. தியேட்டர் முழுக்க சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது விஜய் ஆண்டணிதான். சும்மாவே வைப் ஏற்றும் விஜய் ஆண்டனியின் இசை தியேட்டரையே ஆட வைக்கிறது.
சந்தானம் காமெடியனாக உச்சத்தில் இருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கவுண்டர்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். எனும் மதகஜராஜா (விஷால்) சோனு சூட்டிடமிருந்து தனது நண்பர்களைக் காப்பாற்றுவதே படத்தின் ஒன்லைன் கதை.
போனதெல்லாம் போகட்டுட்டும் தேவையில்லை Tears… துபாய் கார் ரேஸிலிருந்து விலகிய அஜீத்..
சோனு சூட் வழக்கமான வில்லனாக வந்து போகிறார். ரசிகர்களை குஷிப்படுத்த இரு ஹீரோயின்கள். இப்படி படம் முழுக்க தூக்கலான மசாலவைத் தடவி ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தினை அளித்திருக்கிறார் சுந்தர்.சி.
12 வருட காத்திருப்பிற்குப் வெளியான மதகஜராஜாவிற்கு நிச்சயம் பலன் கிடைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்களின் கமெண்டுகள்.
https://x.com/Dhananjayang/status/1878116591700996412
https://x.com/sri50/status/1878298068136738821
https://x.com/NomadianJourney/status/1878112362655621454