நீ யாருடா என் படத்தை தள்ளி வர சொல்றது!.. ரெட் ஜெயண்ட்டுக்கு சரியான பதிலடி கொடுத்த விஷால்!..

By Sarath

Published:

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷாலும் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

அரசியலில் விஷால்:

சுமார் 100 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அந்த படம் மிரட்டிய நினைவில் அடுத்ததாக அஜித்தை இயக்கும் வாய்ப்பு மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என அசத்தல் டைட்டில் வைத்து விரைவில் அந்த படத்தை தொடங்க காத்திருக்கிறார்.

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக்கியுள்ள ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. நேற்று அதன் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஷால் ரத்னம் படம் குறித்தும் தனது அரசியல் வருகை குறித்தும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் ஏற்பட்ட சண்டை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடப் போகிறேன் என விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் மற்றவர்கள் வரக்கூடாது என நினைத்தால் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தையே நீக்கி விடுங்கள் என பட்டென பேசியுள்ளார்.

என்னோட குடும்பத்தில் அவனுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வருவது மக்களுக்கான நல்லது செய்வதற்காக மட்டும்தான் வரவேண்டும். இதுவரை வந்தவர்கள் கிழிக்காத நீ என்ன கிழிக்க போகிறாய் என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் விதமாக அரசியலுக்கு வருவேன் என விஷால் பேசியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் உடன் சண்டை:

ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிற கேள்விக்கு சற்றும் தயக்கம் இல்லாமல் என் படத்தை தள்ளி வர சொல்ல நீ யாரு? அதனால் தான் கோபம். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் உள்ள ஒரு நபர் மீது தான் கோபம். அவர் பற்றி உதயநிதிக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை என விஷால் பேசியுள்ளார்.

சினிமா எவனுக்கும் சொந்தமில்லை. நாங்க சொல்றதுதான் சினிமாவில் நடக்கணும் என எவன் பேசினாலும் அதை எதிர்த்து இந்த விஷால் கேள்வி கேட்பான் என அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

ரத்னம் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஷால். துப்பறிவாளன் 2 படத்தை முடித்து விட்டு விஷாலும் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றே தெரிகிறது.