பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன்.
இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு? டீம் சார்பில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்போல் வேடமிட்டு அவர்களை கலாய்த்தனர், அதில் கவின், சாண்டி, முகின், தர்சன், லாஸ்லியா, அபிராமி, ஷாக்சி, மீரா மிதுன், ஷெரின், சேரன், வனிதா, கஸ்தூரி ஆகியோரைப்போல் வேடமணிந்து இருந்தனர்.
அதன்படி, வனிதா மற்றும் கஸ்தூரியின் வாத்து விஷயம் கொண்டுவரப்பட்டு அதில் வனிதாவினை கலாய்த்தனர்.
அதை கஸ்தூரி ரசித்துப் பார்த்தாலும், வனிதா சற்று கோபமாகவே பார்த்தார். தற்போது அதுகுறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார், அதில் கண்ணீர் சிந்தியவாறே, “என்னை அவமானப்படுத்தவா அந்த விழாவிற்கு அழைத்தீர்களா? என்று கேட்டுள்ளார்.