பொதுவாக தமிழ் சினிமாக்களில் பக்தி படங்கள் அந்தக்காலங்களில் அதிகம் வந்தது. ஏ.பி நாகராஜன், சாண்டோ சின்னப்பா தேவர் ஆகியோர்தான் பக்திப்படங்களை அதிகம் எடுத்தனர். கலர் படங்கள் வந்த காலக்கட்டத்தில் இராமநாராயணன் தான் அதிகம் பக்தி படங்கள் இயக்கியுள்ளார்.
ஆரம்ப காலங்களில் முருகன், சிவன், அம்மன்{பார்வதி}, விஷ்ணு[பெருமாள்} இவர்களின் வரலாறுகளை தாங்கியும் பக்தர்களின் வாழ்வில் இவர்கள் நடத்திய அற்புதங்களை தாங்கியும் அதிக கதைகள் வந்துள்ளது.
ஆனால் முழு முதற்கடவுளான விநாயகரை பற்றி அனேக படங்கள் வரவில்லை. ஒன்றிரண்டு சினிமாக்களே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறையருள் இயக்குனர் ஷங்கர் இயக்கிய வெற்றி விநாயகர் அதில் குறிப்பிடத்தக்க படமாகும். விநாயகரின் அற்புதங்களை பக்தி படங்களை இயக்கிய இயக்குனர்கள் அதிகம் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமான விசயம்.
முருகன் படங்களில் பாம்பு, மயில் வந்து காப்பாற்றுவது, அம்மன் பல படங்களில் கிராபிக்ஸாக வந்து வில்லன்களை உக்கிரமாக அழிப்பது வரை இயக்கிய பல பக்தி இயக்குனர்கள் பிள்ளையார் கதையை பெரிய அளவில் படமாக்கவில்லை.
கடைசி காலக்கட்டத்தில் இறையருள் இயக்குனர் ஷங்கர்தான் மிகுந்த முயற்சி எடுத்து வெற்றி விநாயகர் என்ற படத்தை இயக்கினார்.