வீர தீர சூரன் பட ஷூட்டிங் அப்போ விக்ரம் சார் இதை அடிக்கடி சொல்வாரு… துஷாரா விஜயன் பகிர்வு…

துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகை ஆவார். திண்டுக்கல்லில் பிறந்த துஷாரா விஜயன் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் ஃபேஷன் படிப்பை தொடர்ந்தார். 2019 ஆம் ஆண்டு புது முகங்கள்…

dhushara

துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகை ஆவார். திண்டுக்கல்லில் பிறந்த துஷாரா விஜயன் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் ஃபேஷன் படிப்பை தொடர்ந்தார். 2019 ஆம் ஆண்டு புது முகங்கள் தயாரித்த போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் துஷாரா விஜயன்.

2021 ஆம் ஆண்டு ஆர்யாவுக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் துஷாரா விஜயன். தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி, ராயன், வேட்டையன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் துஷாரா விஜயன்.

தற்போது விக்ரமுக்கு ஜோடியாக வீர தீர சூரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரமை பற்றி துஷாரா விஜயன் ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.

துஷாரா விஜயன் கூறியது என்னவென்றால், வீர தீர சூரன் பட சூட்டிங் நேரத்தில் விக்ரம் சார் அடிக்கடி பரவால்ல நீ நல்லா நடிக்கிற என்று கூறுவார். அவர் விளையாட்டாக தான் கூறுவார் ஆனால் அந்த வார்த்தைகள் எனக்குள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று பகிர்ந்திருக்கிறார் துஷாரா விஜயன்.