5 விரலும் பதிஞ்சுருச்சு.. துருவ் விக்ரம் செஞ்ச அபத்தம்.. கடுப்பில் விக்ரம் கொடுத்த பெரிய தண்டனை..

Dhruv about Vikram : தமிழில் பல நடிகர்கள் அல்லது சினிமா பிரபலங்களின் மகன்கள் அல்லது மகள்கள் அதிக சிபாரிசுடன் சினிமா துறைக்குள் நுழைந்தாலும் அந்த இடத்தை தக்க வைப்பது மிக கடினமான ஒன்றுதான்.…

Vikram beat Dhruv

Dhruv about Vikram : தமிழில் பல நடிகர்கள் அல்லது சினிமா பிரபலங்களின் மகன்கள் அல்லது மகள்கள் அதிக சிபாரிசுடன் சினிமா துறைக்குள் நுழைந்தாலும் அந்த இடத்தை தக்க வைப்பது மிக கடினமான ஒன்றுதான். விஜய், சூர்யா என பலர் அந்த இடத்தை மிகச் சிறப்பாக தக்க வைத்து கொண்டு வரும் அதே வேளையில் அடுத்த தலைமுறையில் மிக முக்கியமான நடிகராக வருவார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளவர் தான் துருவ் விக்ரம்.

வர்மா மற்றும் மஹான் கிய படங்களைத் தொடர்ந்து பைசன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் துருவ் விக்ரம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வெளியான இந்த திரைப்படம் மிகச்சிறப்பான பாராட்டுகளை பெற்று வருவதுடன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு டத்தை பதித்துள்ளதாகவும் பலர் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இளம் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பும் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு அம்சமாக இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் சிறப்பாக நடித்து முக்கியமான உயரத்தை தொடுவார் என பாராட்டி வருகின்றனர்.

பெரிய சம்பவம் ஆச்சு..

சேது, பிதாமகன், தெய்வத்திருமகன், தங்கலான் என நடிப்புக்கே தனி இலக்கணமாக இருக்கும் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம். இதனிடையே, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை விக்ரம் தன்னை அடித்தது தொடர்பாக சில கருத்துக்களை துருவ் விக்ரம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விக்ரம் நடிப்பில் உருவான ‘ஐ’ படத்தில் மெர்சலாயிட்டேன் என்ற பாடல் வரும். இது பற்றி பேசிய துருவ் விக்ரம், “மெர்சலாயிட்டேன் பாட்டுனால ஒரு பெரிய சம்பவமே நடந்தது. என் வாழக்கையிலயே 2, 3 தடவ தான் அப்பா என்னை அடிச்சுருப்பாரு. மெர்சல் ஆயிட்டேன் பாடலை ஷூட் செய்வதற்கு முன்பாக பென் ட்ரைவில் பத்திரமாக வைத்திருந்தனர். ஷங்கர் சார் எப்போதும் தனது படம் மற்றும் பாடல்கள் லீக் ஆகாதபடி இருக்க வேண்டும் என நினைப்பவர்.

5 விரலும் பதிஞ்சுருச்சு..

அந்த பென் டிரைவ் என் கையில் கிடைக்க, அதை ஸ்கூலில் அனைவரிடமும் காட்ட வேண்டும் என நான் விரும்பினேன். வகுப்பில் பாடலை போட்டு காண்பித்து கொஞ்சம் சீன் போட்டேன். பின்னர் அந்த பென் டிரைவுடன் வீட்டிற்கு வந்த போது அப்பா பாடி பில்டர் கெட்டப்பில் இருந்த நேரம். கோபத்துல என் முதுகுல அடிச்சுட்டாரு. அந்த 5 விரல் தடமும் 2 வாரத்துக்கு அப்படியே என் முதுகுல பதிஞ்சு இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது என் அக்கா தான் போட்டு கொடுத்துட்டான்னு” என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது துருவ் விக்ரம் பகிர்ந்து கொண்டுள்ளார்.