Bigg Boss 9 Tamil : இப்போ புரிஞ்சு போச்சு உன்ன பத்தி.. பார்வதி – சபரி சண்டைக்கு நடுவே விக்ரம் பாத்த வேலை.. பத்தி எரிஞ்ச பிக் பாஸ் வீடு..

Vikkals Vikram vs Parvathy : தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே ஒன்பதாவது சீசன் மிக மோசமாக இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில் Wild Card போட்டியாளர்களின் வரவுக்கு பின்னர் கொஞ்சம் சூடு…

Parvathy and Vikram Fight

Vikkals Vikram vs Parvathy : தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே ஒன்பதாவது சீசன் மிக மோசமா இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில் Wild Card போட்டியாளர்களின் வரவுக்கு பின்னர் கொஞ்சம் சூடு பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட பிக் பாஸ் ஆரம்பித்து 35 நாட்கள் ஆகியும் இன்னும் தங்களது திறன் என்ன என்பதை வெளிக்காட்டாமல் பத்தோடு பதினொன்றாக இருக்கும் போட்டியாளர்கள் பலர் உள்ளே இருக்கிறார்கள்.

அதே வேளையில் ஒரு சில போட்டியாளர்கள் தொடர்ந்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் நிலையில் அதில் பார்வதியும் ஒரு போட்டியாளராக பார்க்கப்படுகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் விதிகளையும், போட்டியாளர்களையும் மதிக்காமல் தனக்கு தோன்றுவது தான் சரி என இருந்து வருவதுடன் அது ஒரு தவறான விஷயமாக பார்க்கப்பட்டாலும் சில இடங்களில் அவர் பேசும் விஷயங்கள் மிக அசத்தலாக இருப்பதாக அவரை பிடிக்காத பார்வையாளர்கள் கூட தெரிவிக்கின்றனர்.

ரி vs பார்வதி

அப்படி ஒரு சூழலில் தான் இந்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கின் போது சபரி மற்றும் பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதில் சபரி கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டாலும் ஒரு இடத்தில் பார்வதியை வேண்டும் என்று வேகமாக தள்ளிவிட்டு அவரது உடலும் காயமடையும்படி செய்ய, கடைசியில் போட்டி என்றால் அப்படித்தான் இருக்கும் என்று ஏதோ ஒரு காரணத்தை கூறியிருந்தார்.
Parvathy in Captaincy Task bb

என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் இப்படியா ஒருவரை தள்ளிவிட்டு அவரை காயமடைய செய்வது என பலரும் கேள்வி எழுப்பி நிலையில் இது பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிய திவ்யா கணேஷ், எந்த போட்டியாக இருந்தாலும் இதே மாதிரி மற்றவரை தாக்க வேண்டாம் என்றும் அனைவரையும் அறிவுறுத்துகிறார். இதற்கு மத்தியில் சபரி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் மாறி மாறி சில இடங்களில் வார்த்தைகளை விட்டு வாக்குவாதம் செய்தனர்.

விக்ரம் யாருன்னு புரியுது..

அந்த சமயத்தில் சபரி மீது தவறு இல்லை என்றும் பார்வதி செய்ததிலும் தவறு உள்ளது என விக்கல்ஸ் விக்ரம் உள்ளே வர, அப்போது பார்வதி அவரை எதிர்த்து பேசவும் செய்கிறார். ‘உங்கள பாத்தாவே எனக்கு காண்டா இருக்கு. இப்பதான் விக்ரம் பற்றி எனக்கு நல்லா புரிய வருது. இத்தனை நாள் சண்டையே போடாம இப்போ பார்வதி Disqualified னு சொல்ல வர்றீங்கல்ல.. அப்போவே விக்ரம் யாருன்னு புரியுது.
Parvathy vs Vikkals Vikram

இவ்வளவு நாள் நடுநிலையில இருக்கேன்னு சொல்லிட்டு இப்ப பார்வதியை மட்டும் டார்கெட் பண்றீங்களா?. இதுதான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு’ என விக்ரமை பற்றி பார்வதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, மறுபுறம் விக்ரமோ பார்வதி பேச்சால் அலட்டிக் கொள்ளாமல், கேப்டன்சி டாஸ்கில் திவ்யா ஆடியதை பார்த்தும் நான் Disqualified என சொன்னதாகவும் பார்வதி மீது மட்டும் எனக்கு வெறுப்பில்லை என்றும் கூறுகிறார்.

‘காமெடிங்குற பேர்ல அடுத்தவங்க நல்லா மனசு நோக வைக்குறே’ என்று விக்ரமிடம் பார்வதி சொல்ல, இருவரும் வேடிக்கையாக சண்டை போடுவது போல நிறைய கருத்துக்களை முன்வைத்து கொண்டே இருக்க, மற்ற போட்டியாளர்களோ சிரிப்பதா இல்லை சீரியஸாக இதை சமாளிப்பதா என்று தெரியாத நிலையில் தான் இருந்தனர்.