அஜித்தின் விடாமுயற்சியை ரிலீஸுக்கு முன்பே ஓரங்கட்டிய விஜய்யின் தி கோட்.. ஓடிடி மட்டும் இத்தனை கோடியா?..

By Sarath

Published:

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனியின் இயக்கத்தில், லைகாவின் தயாரிப்பில், அனிருத்தின் இசையில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். மேலும் ரசிகர்கள் பல நாட்களாக படத்தின் அப்டேட்டிற்க்காக காத்திருந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சியில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. விடாமுயற்சி படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகின்றது என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி vs தி கோட்:

விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிருவனம் அறிவித்துள்ளது. ஆனால் ரசிகர்கள் எதிப்பார்த்த அப்டேட்டாக இது இல்லை என வருத்ததில் உள்ளனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாக அறிவித்த நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று திரையில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

லீயோ படத்தை அடுத்து விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இப்படம் ஜூன் மாதம் ரீலிஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. GOAT படத்தின் OTT உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடி விற்பனை:

விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ் 80 கோடி ரூபாய்க்கு விற்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் GOAT ஓடிடி ரைட்ஸ் 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் விடாமுயற்சியை விட GOAT தான் ஓடிடி ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் அதிக மதிப்பை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மேலும், விஜய்யின் லியோ படத்தின் ஓடிடி உரிமையும் 100 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது. தற்போது விஜய்யின் GOAT அதை பிரேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், GOAT படத்தின் ஓடிடி உரிமை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்திற்கு மட்டுமே 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் GOAT ரிலீஸுக்கு முன்பே 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் லியோவும், அஜித்தின் விடாமுயற்சி படமும் ஒரே நாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காவில்லை. இந்நிலையில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், அஜித்தின் விடாமுயற்சி இரண்டும் இந்தாண்டு சம்மர் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் எனரசிகர்கள் எதிப்பார்த்த நிலையில் விடாமுயற்சி மே மாதம் வெளியாகும் என்றும், விஜய்யின் GOAT ஜூன் மாதம் ரிலீஸாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.